உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பெற்றோர் ஆசிரியர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெற்றோர் ஆசிரியர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 30, 2010

திட்டக்குடி அருகே உள்ள தீவளூர் அரசு பள்ளியைதரம் உயர்த்த கோரிக்கை

விருத்தாசலம்: 

                 தீவளூர் அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தலைவர் கருணாமூர்த்தி முதல்வருக்கு விடுத் துள்ள கோரிக்கை மனு:

                 திட்டக்குடி அருகே உள்ள தீவளூர் கிராம அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி கடந்த 24 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த கிராமத்தில் உள்ள மாணவ - மாணவிகள் தங்களின் மேல்நிலைக் கல்வியை தொடர பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 2010- 11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆதி திராவிடர் நலத்துறையின் மானிய கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் நான்கு ஆதி திராவிட நல உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதில் தீவளூர் பள்ளியும் ஒன்றாகும். இப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் கள் மேல்நிலைக் கல்வியை சிரமத்துடனே பயின்று வருகின்றனர். எனவே இப்பள்ளியை விரைவில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 20, 2010

அக்கடவல்லி பள்ளியை அரசு ஏற்காததால் ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல்


பண்ருட்டி: 

                  பண்ருட்டிஅடுத்த அக்கடவல்லியில் உதவி பெறும் பள்ளியை நடத்த முடியவில்லை என நிறுவனர் எழுதிக் கொடுத்தைத் தொடர்ந்து அரசு 7 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டடம் கட்டியும் இன்னும் அரசு பள்ளியாக மாற்றப்படாமல் உள்ளது. இதனால் ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம் அக்கடவல்லி ஊராட்சியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. 

                   இப்பள்ளி கடந்த 1950ம் ஆண்டு ராஜவேல் என்பவரால் துவங் கப் பட்டது. கடந்த 2005ம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் போது இப்பள்ளியை ஆய்வு செய்த டி.ஈ.ஒ., பள்ளியின் கட்டடம் பாழடைந்து உள்ளதால் பள்ளி அனுமதியை ரத்து செய்தார். 2005ம் ஆண்டில் பள்ளி நிறுவனர் ராஜவேல் வயது முதிர்வு காரணமாக பள்ளியை நடத்த முடியவில்லை என அதற்காக 55 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு  அரசே பள்ளியை ஏற்று நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு எழுதிக் கொடுத்தார்.  இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் படிப்பு பாதிக்கும் என்பதால்  ஊராட்சி தலைவர்,  கல்விக் குழு, கிராம முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் திரவுபதி அம்மன் கோவிலில் வகுப்புகள் நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத் தனர். டி.இ.ஓ., அனுமதி அளித்ததன் பேரில் அப்பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் வகுப்புகள் நடந்தது.
 
                  இந்த பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், பள் ளிக்கு சொந்த இடம், கட்டடம், சுகாதார வசதி, சத்துணவு கூடம் இருந்தால் தான் அரசு ஏற்றுக்கொள்ளும் என கல்வித்துறை பதிலளித்தது.  இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு எம்.பி., மேம் பாட்டு நிதியின் கீழ் கடந்த 2008-09ம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டப் பட்டது.

                      மேலும் ஊராட்சி நிதி மூலம் சத்துணவு கூடம் 1.50 லட்சம் செலவிலும், சுகாதார வசதி 50 ஆயிரம் செலவிலும் கட்டப்பட்டு கடந்த ஓராண் டாக புதிய கட்டடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. தற் போது இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 127 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் தேவைப்படும் இப்பள்ளிக்கு தற் போது பள்ளி தலைமையாசிரியர் பாலு, உதவி ஆசிரியை சரஸ்வதி ஆகியோர் மட்டும் உள்ளனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இரண்டு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். அரசு சார்பில் கேட்கப்பட்ட அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் இன்னமும் அரசுப் பள்ளியாக மாற் றப்படாமல் இன்னமும் பள்ளி தனியார் வசமே உள்ளது. கடந்த மாதம் வரை இப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிறுவனர் ராஜவேல் கல்வித் துறை மூலம் சம் பளம் பெற்று தருகிறார். அரசு பள்ளியாக மாற்றப் படாததால் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாமல் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது.
 
இதுகுறித்து பள்ளி கல்விக் குழு உறுப்பினர் ஆறுமுகம் கூறியதாவது: 

                    இந்த பள்ளிக்கு கல் வித் துறை கூறிய அனைத்து வசதிகள் செய்து கொடுத் தும் அரசு பள்ளியாக அறிவிக் கப்படாமல் உள்ளது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. வரும் கல்வியாண்டிற்குள் அரசு பள்ளியை ஏற்க வேண்டும். இல்லையெனில் பொதுமக் களை திரட்டி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடுவோம்' என தெரிவித்தார். 

இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்  விஜயா கூறுகையில் 

                 'அக்கடவல்லி சண்முக ஆனந்த துவக் கப் பள்ளியை அரசு பள்ளியாக ஏற்பது குறித்து பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.கடந்த ஆகஸ்ட் மாதம் உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு அனுப்பிய நினைவூட்டல் கடிதத்திற்கு பதில் வரவில்லை. உடன் பதில் அளிக்க உத்திரவிட்டுள்ளேன். அதன்படி பள்ளி கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும்' என்றார்.

Read more »

சனி, பிப்ரவரி 20, 2010

திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

கடலூர் : 

                    மாணவ சமுதாயத்திற்கு பண்பு, பணிவு, படிப்பு அவசியம் இருக்க வேண்டும் என திருவந்திபுரம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேஷாத்திரி அய்யங்கார் பேசினார். கடலூர் அடுத்த திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலக்கிய மன்றம், விளையாட்டு , ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பழனி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் புதுச்சேரி தினமலர் நிர்வாகி கே.வெங்கட்ராமன்,  புதுப்பிக்கப்பட்ட கம்ப்யூட்டர் அறையை திறந்து வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.உதவி தலைமையாசிரியர்கள் கண் ணன் ஆண்டறிக்கையும், சக்கரவர்த்தி இலக்கிய மன்ற அறிக்கையும் வாசித் தனர்.

                          தமிழாசிரியர் மரியஜோசப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திருவந்திபுரம் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன்,  ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் நரசிம்மன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் துரை வளவன், ராஜகோபாலன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.அரையாண்டு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு, வினாடி வினா, கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேஷாத்திரி அய்யங்கார் தலைமை தாங்கி பேசுகையில்,"தற்போது அரசு, கல்வி முறையில் சமச்சீர் கல்வியை கொண்டு வரப்போகிறது.
                          இதனால் மெட்ரிக்குலேஷன், ஸ்டேட் போர்டு எல்லாம் ஒரே கல்வியின் கீழ் வந்து விடும். அரசு பள்ளி, மெட்ரிக் பள்ளி என இருக்காது.  கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக சைக்கிள், சீருடை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பள்ளியை பொறுத்தவரை அனைத்து வசதிகளும் செய்து, சுற்றுச் சுவரும் கட்டிக் கொடுத்துள்ளேன். சைக்கிள் ஸ்டாண்டு விரைவில் கட்டிக் கொடுக்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு பக்தி, பண்பு, படிப்பு ஆகியவை அவசியம் இருக்க வேண்டும். மாணவ சமுதாயம் எதிர்காலத்தில் நன்றாக வந்தால் தான் ஜனநாயகம் நீடிக்கும். ஜனநாயகம் முக்கியம் என கருதுவதால் தான் தினமலர் நாளிதழ் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தைரியமாக வருகின்ற தேர்வை எதிர் கொள்ள வேண்டும்' என்றார்.

Read more »

புதன், பிப்ரவரி 17, 2010

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாததால் மாணவிகள் அவதி! படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிற்கும் பரிதாபம்

பண்ருட்டி : 

                            பண்ருட்டியில் அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளி  இல்லாமல் ஏழை மாணவிகள் மேல்படிப்பை தொடர முடியாத நிலை நீடித்து வருகிறது. பண்ருட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாமல் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள  அங்குசெட்டிப்பாளையம், திருவதிகை நகராட்சி உயர்நிலைப் பள்ளி, பூங்குணம், கண்டரக் கோட்டை  ஆகிய நான்கு உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேல் நிலை படிப்பு படிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.இந்த நான்கு பள்ளிகளில் படிக்கும் 300 மாணவிகள் அருகில் உள்ள  பண்ருட்டி நகரத்தில் உள்ள பள்ளியில் தான் படிக்க வேண் டும்.

                ஆனால் பண்ருட்டியில் அரசு நிதி உதவி பெறும் சுப்ராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள் ளியில் அங்கு பயிலுமும் மாணவிகளுக்கு மட்டுமே இடம் உள்ளது என கூறி பிற பள்ளி மாணவிகள் சேர்க்கையை தவிர்த்து வருகின்றனர்.இதனால் ஏழை எளிய பெற் றோர்கள் தங்கள் மகள்களை தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நன்கொடை மற்றும் அதிக பணம் செலவழித்து படிக்க வைக்க முடியாமல் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிடுகின்றனர்.இதுகுறித்து எம்.எல்.ஏ., வேல் முருகன் முயற்சியின்பேரில் பண் ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்  பிளஸ் 1, பிளஸ் 2  வகுப்பில் மாணவிகளை சேர்க்க சி.இ.ஒ., அனுமதி வழங்கினார். அதன்படி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல் நிலை பிரிவிற்கு மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இதனால் ஒவ்வொரு வகுப்பிலும் 95 மாணவ,  மாணவிகள் இருப்பதால் இடப் பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது. போதிய இடவசதி இன்றி மாணவர்கள் தரையில் உட்கார்ந்து படித்து வருகின்றனர்.
                     கூடுதல் எண்ணிக்கை மாணவர்கள் ஒரே வகுப்பில் படிப்பதால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது. ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் அதிகம் படிக் கும் பள்ளியில் மாணவிகளை சேர்க்க பெற்றோர்களும் முன்வருவதில்லை.  இதனால் அங்குசெட்டிப்பாளையம், பூங்குணம், திருவதிகை, கண்டரக்கோட்டை ஆகிய நான்கு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பத்தாம் வகுப்பு முடித்ததும் மேல்நிலை கல்வியை தொடர முடியாமல்  முந்திரி தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் வேலை செய்து  வருகின்றனர். இதற்கு தீர்வாக பண்ருட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி என படிப்படியாக தரம் உயர்த்தினால் இருஆண்டில் தீர்வு ஏற்படும்.


                       இல்லையெனில் அங்குசெட்டிப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தலாம். பூங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கடந்தாண்டு ஒரு லட்சம் பணம் செலுத்தியும் கிடப்பில் உள்ளது.  இத்திட் டத்தை விரைவுப்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி., அழகிரி பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி துவக்க நடவடிக்கை எடுப் தாக உறுதியளித்தார். ஆனால் பெண்கள் பள்ளி துவக்குவதற்கான பூர்வாங்க பணிகள் கூட இதுவரை துவங்கவில்லை. இதனால் வரும் 2010-11ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறும்  மாணவிகள் மேல்நிலை வகுப் பில் படிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம், கல்வித்துறையும் இணைந்து பண்ருட்டியில் அரசு  பெண்கள் மேல் நிலை பள்ளி அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டு முயற்சி தேவை : 

                பண்ருட்டியில் அரசு பெண்கள் பள்ளி கொண்டு வர மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முன்வந்து கல்வித் துறையின் விதிமுறைகள் படி பள்ளிக்கான  இடம், கட்டட வசதிகள், தரம் உயர்த்த அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தினால் மட்டுமே அரசு பெண்கள் பள்ளி அமைக்க முடியும். இதற்கு மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறையினர் இணைந்து முயற்சிக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior