பண்ருட்டி :
பண்ருட்டியில் அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளி இல்லாமல் ஏழை மாணவிகள் மேல்படிப்பை தொடர முடியாத நிலை நீடித்து வருகிறது. பண்ருட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாமல் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள அங்குசெட்டிப்பாளையம், திருவதிகை நகராட்சி உயர்நிலைப் பள்ளி, பூங்குணம், கண்டரக் கோட்டை ஆகிய நான்கு உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேல் நிலை படிப்பு படிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.இந்த நான்கு பள்ளிகளில் படிக்கும் 300 மாணவிகள் அருகில் உள்ள பண்ருட்டி நகரத்தில் உள்ள பள்ளியில் தான் படிக்க வேண் டும்.
ஆனால் பண்ருட்டியில் அரசு நிதி உதவி பெறும் சுப்ராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள் ளியில் அங்கு பயிலுமும் மாணவிகளுக்கு மட்டுமே இடம் உள்ளது என கூறி பிற பள்ளி மாணவிகள் சேர்க்கையை தவிர்த்து வருகின்றனர்.இதனால் ஏழை எளிய பெற் றோர்கள் தங்கள் மகள்களை தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நன்கொடை மற்றும் அதிக பணம் செலவழித்து படிக்க வைக்க முடியாமல் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிடுகின்றனர்.இதுகுறித்து எம்.எல்.ஏ., வேல் முருகன் முயற்சியின்பேரில் பண் ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் மாணவிகளை சேர்க்க சி.இ.ஒ., அனுமதி வழங்கினார். அதன்படி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல் நிலை பிரிவிற்கு மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இதனால் ஒவ்வொரு வகுப்பிலும் 95 மாணவ, மாணவிகள் இருப்பதால் இடப் பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது. போதிய இடவசதி இன்றி மாணவர்கள் தரையில் உட்கார்ந்து படித்து வருகின்றனர்.
கூடுதல் எண்ணிக்கை மாணவர்கள் ஒரே வகுப்பில் படிப்பதால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது. ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் அதிகம் படிக் கும் பள்ளியில் மாணவிகளை சேர்க்க பெற்றோர்களும் முன்வருவதில்லை. இதனால் அங்குசெட்டிப்பாளையம், பூங்குணம், திருவதிகை, கண்டரக்கோட்டை ஆகிய நான்கு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பத்தாம் வகுப்பு முடித்ததும் மேல்நிலை கல்வியை தொடர முடியாமல் முந்திரி தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இதற்கு தீர்வாக பண்ருட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி என படிப்படியாக தரம் உயர்த்தினால் இருஆண்டில் தீர்வு ஏற்படும்.
இல்லையெனில் அங்குசெட்டிப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தலாம். பூங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கடந்தாண்டு ஒரு லட்சம் பணம் செலுத்தியும் கிடப்பில் உள்ளது. இத்திட் டத்தை விரைவுப்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி., அழகிரி பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி துவக்க நடவடிக்கை எடுப் தாக உறுதியளித்தார். ஆனால் பெண்கள் பள்ளி துவக்குவதற்கான பூர்வாங்க பணிகள் கூட இதுவரை துவங்கவில்லை. இதனால் வரும் 2010-11ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவிகள் மேல்நிலை வகுப் பில் படிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம், கல்வித்துறையும் இணைந்து பண்ருட்டியில் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டு முயற்சி தேவை :
பண்ருட்டியில் அரசு பெண்கள் பள்ளி கொண்டு வர மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முன்வந்து கல்வித் துறையின் விதிமுறைகள் படி பள்ளிக்கான இடம், கட்டட வசதிகள், தரம் உயர்த்த அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தினால் மட்டுமே அரசு பெண்கள் பள்ளி அமைக்க முடியும். இதற்கு மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறையினர் இணைந்து முயற்சிக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக