பண்ருட்டி:
பண்ருட்டிஅடுத்த அக்கடவல்லியில் உதவி பெறும் பள்ளியை நடத்த முடியவில்லை என நிறுவனர் எழுதிக் கொடுத்தைத் தொடர்ந்து அரசு 7 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டடம் கட்டியும் இன்னும் அரசு பள்ளியாக மாற்றப்படாமல் உள்ளது. இதனால் ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம் அக்கடவல்லி ஊராட்சியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளி கடந்த 1950ம் ஆண்டு ராஜவேல் என்பவரால் துவங் கப் பட்டது. கடந்த 2005ம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் போது இப்பள்ளியை ஆய்வு செய்த டி.ஈ.ஒ., பள்ளியின் கட்டடம் பாழடைந்து உள்ளதால் பள்ளி அனுமதியை ரத்து செய்தார். 2005ம் ஆண்டில் பள்ளி நிறுவனர் ராஜவேல் வயது முதிர்வு காரணமாக பள்ளியை நடத்த முடியவில்லை என அதற்காக 55 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு அரசே பள்ளியை ஏற்று நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு எழுதிக் கொடுத்தார். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் படிப்பு பாதிக்கும் என்பதால் ஊராட்சி தலைவர், கல்விக் குழு, கிராம முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் திரவுபதி அம்மன் கோவிலில் வகுப்புகள் நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத் தனர். டி.இ.ஓ., அனுமதி அளித்ததன் பேரில் அப்பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் வகுப்புகள் நடந்தது.
இந்த பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், பள் ளிக்கு சொந்த இடம், கட்டடம், சுகாதார வசதி, சத்துணவு கூடம் இருந்தால் தான் அரசு ஏற்றுக்கொள்ளும் என கல்வித்துறை பதிலளித்தது. இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு எம்.பி., மேம் பாட்டு நிதியின் கீழ் கடந்த 2008-09ம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டப் பட்டது.
மேலும் ஊராட்சி நிதி மூலம் சத்துணவு கூடம் 1.50 லட்சம் செலவிலும், சுகாதார வசதி 50 ஆயிரம் செலவிலும் கட்டப்பட்டு கடந்த ஓராண் டாக புதிய கட்டடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. தற் போது இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 127 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் தேவைப்படும் இப்பள்ளிக்கு தற் போது பள்ளி தலைமையாசிரியர் பாலு, உதவி ஆசிரியை சரஸ்வதி ஆகியோர் மட்டும் உள்ளனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இரண்டு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். அரசு சார்பில் கேட்கப்பட்ட அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் இன்னமும் அரசுப் பள்ளியாக மாற் றப்படாமல் இன்னமும் பள்ளி தனியார் வசமே உள்ளது. கடந்த மாதம் வரை இப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிறுவனர் ராஜவேல் கல்வித் துறை மூலம் சம் பளம் பெற்று தருகிறார். அரசு பள்ளியாக மாற்றப் படாததால் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாமல் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்விக் குழு உறுப்பினர் ஆறுமுகம் கூறியதாவது:
இந்த பள்ளிக்கு கல் வித் துறை கூறிய அனைத்து வசதிகள் செய்து கொடுத் தும் அரசு பள்ளியாக அறிவிக் கப்படாமல் உள்ளது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. வரும் கல்வியாண்டிற்குள் அரசு பள்ளியை ஏற்க வேண்டும். இல்லையெனில் பொதுமக் களை திரட்டி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடுவோம்' என தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயா கூறுகையில்
'அக்கடவல்லி சண்முக ஆனந்த துவக் கப் பள்ளியை அரசு பள்ளியாக ஏற்பது குறித்து பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.கடந்த ஆகஸ்ட் மாதம் உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு அனுப்பிய நினைவூட்டல் கடிதத்திற்கு பதில் வரவில்லை. உடன் பதில் அளிக்க உத்திரவிட்டுள்ளேன். அதன்படி பள்ளி கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும்' என்றார்.