சிதம்பரம் :
சிதம்பரத்தில் டி.என். பி.எஸ்.சி., குருப் 1 தேர்வு இன்று நடக்கிறது. ஏழு மையங்களில் 2,467 பேர் எழுதுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வு சிதம்பரத்தில் இன்று 2ம் தேதி நடக்கிறது. சிதம் பரம் அரசு நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளி, ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பன் மேல் நிலைப் பள்ளி, சி.முட்லூர் அரசு கல்லூரி ஆகிய ஏழு மையங்களில் மொத்தம் 2,467 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் 10 முதன்மை மேற்பார்வையாளர்கள், 10 ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மையங்களை கண்காணிக்க சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராமராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்), மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், டி.எஸ்.பி., மூவேந்தன் ஆகியோர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் டி.ஆர்.ஓ., நடராஜன் நேற்று தேர்வு மையங்களை பார்வையிட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் தேர்வு நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஆய்வு பணி அலுவலர்களுக்கு தேர்வு விதிகளை விளக்கினார். தேர்வு நேரத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கவும், தேர்வர்கள் நலன் கருதி மையங்களுக்கு சிறப்பு பஸ் இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக