உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 02, 2010

அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் சூதாடுமிடமாக மாறியுள்ளது: ஒன்றிய கவுன்சிலர் புகார்


பண்ருட்டி : 

                     அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடிநீர் இல்லை, குரங்குகள் தொல்லை, சூதாட்ட இடமாக இருப்பதாக ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் கூறினர். பண்ருட்டி அடுத்த அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் அவசரக் கூட்டம் நடந்தது. ஒன்றிய சேர்மன் கவுரிபாண்டியன் தலைமை தாங்கினார். பி.டி.ஒ., க்கள் தமிழரசி, சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர் ராமு பேசும் போது, மைக் வசதி இல்லை, யூனியன் அலுவலகத்திலே குடிதண்ணீர் இல்லை. எப்படி கிராமங்களில் குடிநீர் பிரச்னை தீர்ப்பீர்கள் என் றார்.

                       அதற்கு பதிலளித்த பி.டி.ஒ., சுப்ரமணியன் சிண்டக் டேங்க் மூலம் குடிநீர் தொட்டி அமைக்க 85 ஆயிரம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும், மைக் வசதியும் ஏற்படுத்தி தரப்படும் என்றார். தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர் ரேவதி பேசும் போது, கரும்பூர் ஊராட் சிக்கு அமரர் டயர் வண்டி வழங்க வேண்டும் என் றார். அப்போது குறுக்கிட்ட மற்றொரு கவுன்சிலர் அனைத்து ஊராட்சிக்கும் அமரர் வண்டி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். அ.தி.மு.க., கவுன்சிலர் அன்பழகன் பேசும் போது, ஊராட்சி ஒன்றிய வளாகத் தில் சுற்றுசுவர் இல்லை. சமூக விரோதிகள் சூதாட்டம் விளையாடி வருகின்றனர். சிறுவர்கள்,பெரியவர்கள் கிரிக்கெட் விளையாடி கண்ணாடிகளை சேதப்படுத்ததி வருகின்றனர். குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்றார். இதற்கு பதிலளித்த பி.டி.ஒ. சுப்ரமணியன் குரங்குகள் பிடிக்கவும், ஊராட்சி ஒன்றிய வளா கத்தில் சூதாட்டம் விளையாடுபவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior