உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 02, 2010

கேட்ட இடத்தில் 'டிரான்ஸ்பர்' உத்தரவு: எஸ்.பி., அதிரடிக்கு போலீசார் பாராட்டு


கடலூர் : 

                    கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் 250 பேருக்கு நேற்று கவுன்சிலிங் மூலம் கேட்ட இடத்திற்கு பணியிட மாறுதல் வழங்கி எஸ்.பி., உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் பணி புரிந்து வரும் போலீசார்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது மாறுதல் வழங்கப்படும். இதற்காக முன்கூட்டியே மனு கொடுத்து அதிகாரிகள் மூலமாக சிபாரிசு செய்பவர்களுக்கு மட் டுமே கேட்ட இடத்தில் மாறுதல் கிடைக்கும். மற்றவர்களுக்கு எங் காவது ஒரு இடத்தில் போடுவதுதான் வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பொறியியல் படிப்பிற்கு நடத்தப்படும் கவுன்சிலிங் பாலவே போலீசாருக்கும் நடத்த திட்டமிட்டார்.

                     கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சேத்தியாதோப்பு, சிதம்பரம் என ஏழு சப்டிவிஷன்கள் உள்ளன. மொத்தம் 46 போலீஸ் நிலையங்களில் 3, 7 ஆண்டுகளை கடந்து பணியாற்றி வரும் போலீசார் நேற்று ஜாங்கிட் போலீஸ் திருமண மண்டபத்தில் நடந்த கவுன்சிலிங் கிற்கு அழைக்கப்பட்டனர்.அனைத்து போலீசார் முன்னிலையில் ஒளிவு மறைவின்றி கம்ப்யூட்டரில் காலி பணியிடங்கள் எல்.சி.டி., புரஜெக்டர் மூலம் பார்வையில் தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தது. வயது, சீனியாரிட்டி அடிப்படையில் மூன்று ஆண்டுகள், ஏழு ஆண்டுகள் முடித்த போலீசார் நேரடியாக அழைக்கப்பட்டு அவர்கள் கேட்ட இடத்திற்கு எஸ்.பி., பணியிட மாறுதல் உத்தரவை வழங்கினார். சொந்த ஊரை தவிர்த்து மற்ற இடங்களுக்கு எந்த தடையுமின்றி உத்தரவு வழங்கப்பட்டது. நேற்று நடந்த கவுன்சிலிங்கில் 250 பேருக்கு பொது மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.கேட்ட இடத்தில் மாறுதல் கிடைத்த மகிழ்ச்சியில் போலீசார் கூறுகையில், சீருடையை பொறுத்தவரை எங்கள் சர்வீசில் இது போன்று ஒரு மாறுதல் யாரும் கொடுத்ததில்லை என எஸ்.பி., யை பாராட்டினர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior