உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 25, 2010

என்எல்சியில் 60 சதவீத வேலைவாய்ப்பை நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்க வலியுறுத்தல்

நெய்வேலி:

                       என்எல்சி நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு வீடு நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக 60 சதவீத தாற்காலிக வேலைவாய்ப்பு வழங்கி, எஞ்சிய காலிப் பணியிடங்களை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என என்எல்சிக்கு நிலம் கொடுத்துப் பாதிக்கப்பட்டோர் நலச் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

                      என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்துப் பாதிக்கப்பட்ட நலச் சங்கத்தின் கருத்தாய்வுக் கூட்டம் சங்கச் செயலர் எ.ஜான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் ஏனைய நிர்வாகிகள் வி.பெருமாள், செந்தில்குமார், வெங்கடேசன், மதியழகன், ராஜேந்திரன், வஜ்ரவேலு, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 

                      நிறுவன விரிவாக்கப் பணிகளுக்காக வீடு நிலம் கொடுத்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டோரை எளிதில் அடையாளம் காணுகின்ற வகையிலும், ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையிலும் சிறப்பு பல்நோக்கு அடையாள அட்டையை என்எல்சி வழங்க வேண்டும். நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏதுவாக தனி இன்கோ-சர்வ் சொசைட்டி உருவாக்கப் பட வேண்டும்.

                    மேலும் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்க உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியிருப்பதாகவும், அதனடிப்படையில் பரிசீலனை நடைபெறுவதாகவும் அறிகிறோம். அப்படி என்எல்சி நிர்வாகம் பரிசீலனை செய்யும்பட்சத்தில் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பில் 40 சதவீதமும், தாற்காலிக வேலைவாய்ப்பில் 60 சதவீதமும் வழங்கி மீதமுள்ள காலிப் பணியிடங்களை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

                             வீடு நிலம் கொடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என சங்கம் சார்பில் கேட்டுக்கொள்வது உள்ளிட்டத் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior