நெய்வேலி:
நெய்வேலி இன்னர் வீல் சங்கம் சார்பில் மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம் மந்தாரக்குப்பத்தில் உள்ள பொன்னி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி இன்னர் வீல் சங்கமும், அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய முகாமுக்கு நெய்வேலி லிக்னைட் சிட்டி அரிமா சங்கத் தலைவர் நாகரத்னம் தலைமை வகித்தார். முகாமில் மகளிருக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் 100 பெண்கள் இம்முகாமில் கலந்துகொண்டனர். மேலும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இன்னர் வீல் சங்க நிர்வாகிகள் டாக்டர் அன்புக்கிளி மற்றும் டாக்டர் காயத்ரி ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நெய்வேலி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பாபுஜி மற்றும் நெய்வேலி விப்ஸ் அமைப்பின் தலைவி டாக்டர் தாரணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக