பண்ருட்டி:
பண்ருட்டி வட்டாரத்தில் நீர்வள நிலவளத் திட்டத்தில் கெடிலம் நீர் வடிமுக பகுதியில் மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல்கள் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வேளாண்மை உதவி இயக்குநர் பி.ஹரிதாஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
பண்ருட்டி பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி மிகக் குறைவாக உள்ளது. இச்சாகுபடியை ஊக்கப்படுத்த ஒரு ஹெக்டர் செயல்விளக்கத் திடல்கள் சாலையோரத்தில் உள்ள விவசாயிகளின் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது. ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்யும் நீரைக் கொண்டு இரண்டு ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம்.
உமியில்லாத உணவு தானியம்.
இதில் பல்வேறு உணவுப் பொருள்களை தயாரித்து உணவாக உண்கிறோம். கோழித் தீவனம் தயாரிக்கப் பயன்படுகிறது. ஹெக்டருக்கு இரண்டரை டன்னுக்கு மேல் மகசூல் தரவல்லது, இதனை தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும், கலப்புப் பயிராகவும், வரப்பு ஓராப் பயிராகவும் பயிரிடலாம்.
எனவே பாசன நீரின் சிக்கன உபயோகத்துக்கும், மக்காச்சோளம் சாகுபடியை பரவலாக்கவும் சாலையோரங்களில் செயல் விளக்கத் திடல்கள் கெடிலம் நீர்வடி முகடுப் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. தகுதியான முன்னோடி விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்களை அணுகலாம் என பி.ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக