உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 27, 2010

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதித்த சிறுவர்களின் கல்விக்கு ரூ.1.13 கோடி செலவிடப்பட்டுள்ளது: கலெக்டர் சீத்தாராமன்

கடலூர்:
 
            சுனாமியில் பெற்றோரை இழந்த 222 ஆதரவற்ற சிறுவர்களின் கல்விக்காக இதுவரை ஒரு கோடிய 13 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

              மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் உள்ள சுனாமி நினைவு தூணில் கலெக்டர் சீத்தாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.நிகழ்ச்சியில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன், சேர்மன் தங்கராசு, துணை சேர்மன் தாமரைச்செல்வன், நகராட்சி கமிஷனர் இளங்கோவன், டி.எஸ்.பி., பாண்டியன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் கடலூர் அரசு சேவை இல்ல வளாகத்தில் உள்ள சுனாமி காப்பகத்தில் தங்கி படித்து வரும் சுனாமியில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறுவர்களுடன் அஞ்சலி செலுத்தினர். காப்பக சிறுவர்களுக்கு கலெக்டர் சீத்தாராமன் தனது சொந்த செலவில் சால்வை மற்றும் புத்தகங்களை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில், 

                "சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. சுனாமியில் வீடு உள்ளிட்ட உடமைகளை இழந்தவர்களுக்கு ராஜிவ்காந்தி மறுவாழ்வு புனரமைப்பு திட்டத்தில் 1,589 வீடுகளும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் 5,090 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த 222 ஆதரவற்ற சிறுவர்களின் கல்விக்காக இதுவரை ஒரு கோடிய 13 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

                மேலும், கடற்கரைக்கு 1,000 மீட்டருக்குள் இயற்கை இடர்பாடுகளை தாங்க முடியாத நிலையில் உள்ள 351 வீடுகளை உலக வங்கி நிதியுதவியுடன் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்பட உள்ளது. ஐதராபத்தில் உள்ள சுனாமி ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தால் அதனை உடனடியாக மீனவ கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்க ஒயர்லஸ் கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடையில்லா தகவல் பரிமாற்றத்திற்கு வசதியாக நெய்வேலியில் பன்பலை வானொலி நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior