கிள்ளை :
சிதம்பரம் அருகே சி.முட்லூர் வெள்ளாற்றுப் பாலத்தில் மின் விளக்கு அமைக்கக் கோரி முதல்வருக்கு பொது நல அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொது நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு:
சிதம்பரம் அருகே சி.முட்லூர் - பி.முட்லூரை இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் விளக்கு வசதி அமைக்கவில்லை. இதனால் பாலத்தில் சிலர் இரவு நேரத்தில் மது அருந்தி விட்டு பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். சைக்கிள், பைக் மற்றும் கார் டயரில் குத்தி பஞ்சராவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் அதிகளவில் விபத்தும் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் விபத்தை தடுக்க புதிய பாலத்தில் மின் விளக்கு வசதி அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக