தொழிலாளர் நலம் குறித்த 3 மாத கால சான்றிதழ் படிப்பு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ. 30) தொடங்கப்பட்டது.
படிப்பைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு தலைமை தொழிற்சாலைகள் கண்காணிப்பாளர் அய்யனு பேசியது:-
சட்டப்படி பணி அமர்த்தப்பட வேண்டிய, பயிற்சி பெற்ற தொழிலாளர் நல டாக்டர்கள் கிடைக்காததால், தொழிலதிபர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். நாட்டில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் நல டாக்டர்கள் தேவை உள்ளது. ஆனால் இப்போது 1,314 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்.
தொழிலாளர் நலனை உணர்ந்துள்ள தொழிலதிபர்கள் ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் நல டாக்டர்களை அமர்த்த விரும்புகிறார்கள் என்றார். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் பணி செய்த டாக்டர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். மத்திய தொழிலாளர் நல நிறுவனம் படிப்புக்கான சான்றிதழை வழங்கும். மத்திய தொழிலாளர் நல நிறுவனத்தின் துணை இயக்குநர் ஜெனரல் ஜி.எம்.இ.கே.ராஜ், இயக்குநர் டாக்டர் ஆர்.பி.ராய்தாஸ், சென்னை வட்டார தொழிலாளர் நல நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆர்.கே.இளங்கோவன், பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எஸ். ரங்கசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக