உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 13, 2010

கடலூரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி இன்று உண்ணாவிரதம்: பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

கடலூரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நாளை உண்ணாவிரதம்: பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

 கடலூர்:

           கடலூர் நகரில் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய பாதாள சாக்கடை பணிகள் இன்னும் முடிவடையாததால் சாலைகள் குண்டும், குழியுமாகி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

                இதனால் கடலூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் இணைந்து கடந்த மாதம் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் அடுத்த கட்டமாக இன்று கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசியல் கட்சிகளும், அனைத்து தொழிற் சங்கங்களும், பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பினரும், மோட்டார் வாகன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினரும், அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தினரும் இணைந்து நடத்தும் உண்ணா விரத போராட்டம் நடைபெறு கிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் தே.மு.தி.க.வும் கைகோர் த்துக் கொண்டுள்ளது.

                உண்ணாவிரத போராட்டத்துக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.தளவாய் சுந்தரம் தலைமை தாங்குகிறார். அ.தி.மு.க. மாவட்ட செய லாளரும்(கடலூர் கிழக்கு), முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.ராமலிங்கம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறு முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செய லாளர் சேகர் ஆகி யோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

                     ம.தி.மு.க. பொருளாளர் மாசிலாமணி, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், அ.தி.மு.க. மருத்துவ பிரிவு துணை செயலாளர் சீனுவாசராஜா, தே.மு.தி.க. விவசாய தொழிலாளர் பிரிவு செய லாளர் வி.சி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன், இந்தியகம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மணிவாசகம், அ.தி.மு.க. நகர செயலாளர் குமார், தே.மு.தி.க. நகர செயலாளர் தஷ்ணா, ம.தி.மு.க. நகர செயலாளர் சேகர் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior