உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 13, 2010

தவறுகளை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்; விழுப்புரம் டி.ஐ.ஜி பேட்டி

சிதம்பரம்:

                 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்வதற்காக விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி மாசானமுத்து நேற்று காட்டுமன்னார்கோவில் வந்தார். அதையடுத்து அவர் போலீஸ் நிலையத்தில் போலீசாரின் வருகை பதிவேடு மற்றும் வழக்கின் முக்கிய ஆவணங்களை சரி பார்த்தார். பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகள், குற்றவாளிகள் தலைமறைவு போன்ற பல்வேறு குற்ற நடவடிக்கை பற்றி போலீசாரிடம் கேட்டறிந்தார். 
 
அதை தொடர்ந்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி மாசானமுத்து கூறியது:-  

                  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை போலீஸ் நிலையங்களில் வட்ட ஆய்வு நடைபெறும். அதற்காக இங்கு வந்தேன். வழக்கு குற்றங்களை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். விபத்து வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். அடி தடி, காயம் போன்ற வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் உள்ளது. இதற்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.   வீரநாராயண பெருமாள் கோவிலில் இரவு ரோந்து செல்ல போலீசாரை அறிவுறுத்தி உள்ளேன். போலீசார் நல்லவர்களுக்கு நண்பர்களாகவும், கெட்டவர்களாகவும் சிம்ம சொப்பனமாக விளங்க வேண்டும். குற்றங்கள் குறைந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

                 பேட்டியின்போது சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லமுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்தி, முத்துக்குமரன், ஜெயராமன், ரெங்கநாதன் உள்பட பலர் உடனிருந்தனர். அதையடுத்து சிதம்பரம் வந்த போலீஸ் டி.ஐ.ஜி மாசானமுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை ஆய்வு செய்தார். பின்னர் மரக்கன்று நட்டு வைத்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior