சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் மர்ம கும்பல் புகுந்து கைவரிசை காட்டினர்.
கடந்த 22-ந் தேதி சிதம்பரம் கீழ சாவடியில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளைபோனது. இது தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் ஜோதி ரத்தினம் கிள்ளை போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடந்ததால் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவநேசன் தலைமையில் தணிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொள் ளையர்கள் பற்றி தீவிரமாக துப்பு தொடங்கி வந்தனர்.
நேற்று இரவு சிதம்பரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 3 பேர் சந்தேகப்படும் படி நின்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில் 3 பேரும் டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்தது உறுதியானது. அவர்களை போலீசார் கைது செய்தனர்
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
செந்தமிழ்செல்வன் (வயது 37), சத்தியமூர்த்தி (22), கண்ணன் (29) சீர்காழியை சேர்ந்த 3 பேரும் சிதம்பரம் லாஸ்பேட்டை தெருவில் ஒரு அறைஎடுத்து தங்கி தங்களது கைவரிசையை காட்டி உள்ளனர். உடனே போலீசார் அந்த அறைக்கு விரைந்தனர். அங்கு இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள், கடத்துவதற்கு பயன்படுத்திய மினி லாரி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக