உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 13, 2010

கடலூர் மாவட்டத்திற்கு வெள்ள சேதம் தற்காலிக சீரமைப்பு பணிக்கு ரூ.4 கோடியே 32 லட்சம்: பொதுப்பணித்துறை செயலாளர் தனவேல் தகவல்

காட்டுமன்னார்கோவில்:

                கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையினால் மாவட்டமே நீரில் தத்தளித்தது. குறிப்பாக பிற மாவட்டங்களில் பெய்த மழையினால் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய தாலுகா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

                 இந்நிலையில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வுசெய்வதற்காக பொதுப் பணித்துறை அரசு செயலாளர் தனவேல் நேற்று காட்டு மன்னார்கோவில் வந்தார். அதையடுத்து அவர் வீராணம் ஏரியை பார்வையிட்டார். பின்னர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் வெள்ளியங்கால்  ஓடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

                  அப்போது அருகில் இருந்த மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், மாவட்ட வருவாய் அதிகாரி நடராஜன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் களிடம் வெள்ளியங்கால் ஓடையின் நீர் தேக்க அளவு எவ்வளவு, எவ்வளவு தண்ணீர் மழைக்காலங்களில் வெளியேற்றப்பட்டது என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் லால்பேட்டை பயணியர் விடுதியில் பேட்டி அளித்தார்

அப்போது
பொதுப் பணித்துறை அரசு செயலாளர் தனவேல்
கூறியதாவது:-

                   தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையினால் தற்போது பெரும்பாலான ஏரிகள், கால்வாய்க்கல், ஆறுகள், வாய்க்கால்கள் சேதமடைந்து உள்ளது.இவற்றை தற்காலிகமாக சீர்செய்ய பொதுப்பணித்துறை சார்பில் தமிழக அரசுக்கு ரூ.30 கோடி தேவை என்று அறிக்கை அனுப்பப்பட்டது. தமிழக முதல்- அமைச்சர் உத்தரவுபடி இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு ரூ.4 கோடியே 32 லட்சம் தற்காலிக சீரமைப்பு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த பணிகளை 45 நாட்களில் முடிக்க வேண்டும்.

                    வெள்ள சேதங்களை நிரந்தரமாக தடுக்கும் வகையில் தஞ்சை, நாகை, கடலூர், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ள மேலாண்மை திட்டம் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.635 கோடியே 54 லட்சத்தை தமிழக முதல்- அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் தஞ்சை, நாகை, கடலூர் மாவட்ட பகுதிகளில் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் நிரந்தர வெள்ள தடுப்புபணி களான தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் வலது கரையில் கல்லணை தலைப்பில் இருந்து கீழணை வரை மேம்படுத்துதல், கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள்ளதடுப்பு பணிக்காக கொள்ளிடம் வலது கரையில் கீழணையில் இருந்து கடலில் சென்று சேரும் வரை ரூ.375 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

                  கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு, கெடிலம், உப்பனாறு, பரவனாறு மற்றும் தெற்கு மலட்டாறு மூலம் பண்ருட்டி மற்றும் கடலூர் நகரங்களில் வெள்ளத்தினால் ஏற்படும் சேதங்களை தடுக்க நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் ரூ.68 கோடியே 41 லட்சமும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வெள்ளாறு வடிநிலத்தில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளாக கடலூர் மாவட்டத்தில் வெள்ளாற்றின் விரிவான வெள்ள மேலாண்மை பணிகள், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வெள்ளாறு வடிநிலத்தின் மணிமுத்தா உபவடிநிலத்தில் விரிவான வெள்ள மேலாண்மை பணிகள் ரூ.164 கோடியே 32 லட்சம் செலவிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி யாற்றில் ஏ.என்.குப்பம் அணைக் கட்டிற்குமேல் மற்றும் கீழ்புறங்களிலும் லட்சுமி புரம் அணைக்கட்டில் இருந்து புலிகாட் வரையில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் ரூ.12 கோடியே 41 லட்சம் செலவிலும், அதே மாவட்ட த்தில் கொசஸ் தலையாறு ஆற்றில் நாப் பாளையம் முதல் கடல் முகத்துவாரம் வரை நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.14கோடியே 50 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இந்த பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கி 2012 மார்ச் மாதம் முடிக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.

                             வீராணம் ஏரியின் வெள்ளியங்கால் ஓடையி னால் ஏற்படும் வெள்ள சேதங்களை நிரந்தரமாக தடுப்பதற்கு தமிழக முதல்- அமைச்சர் உத்தரவின்பேரில் முதல் கட்ட ஆய்வு பொதுப் பணித்துறை வல்லுநர்களால் நடத்தப்பட்டு ரூ.93 கோடி நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கும்.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 13 ஆயிரத்து 702 ஏரிகள் உள்ளது. இதில் 9 ஆயிரத்து 637 ஏரிகள் கடந்த மழையினால் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

                     1678 ஏரிகள் 75 சதவீதத் திற்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.7 சதவீத ஏரிகள் 50 சதவீத தண்ணீரும், 8 சதவீத ஏரிகள் பாதி அளவுக்கு கீழ் தண்ணீர் உள்ளது. நீர் நிலைகள் நன்றாக உள்ளது.பெரிய அணை களான மேட்டூர், சாத்தனூர், வைகை போன்ற பெரிய பெரிய அணைகள் முழுமை யான நிரம்பி உள்ளது. வீராணம் ஏரியில் மழைக்காலங்களில் 48.5 சதவீதம் நீர் தேக்கப்பட்டது.பாசனத்திற்கும் , சென்னை குடிநீருக்கும் இந்த ஏரி மிக முக்கியமாக கருதப்படுவதால் அந்த அளவுக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டது. பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மழைக் காலங்களில் வீரா ணம் ஏரியில் தண்ணீரை அதிக அளவு தேக்க வேண் டாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களின் கருத்துகளை தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிசீலனை செய்யப்படும்.

                     மேலும் தற்போது பெய்த மழையினால் பழுதடைந் துள்ள நீர் ஆதார ஷட்டர்கள் பழுது நீக்கம் செய்யப்படும். இவ்வாறு பொதுப் பணித் துறை அரசு செயலாளர் தனவேல் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior