கடலூர்:
ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் இறந்தால், இறுதிச் சடங்குக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் இறந்தால், அவரது குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்குக்காக ரூ. 500 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை தற்போது ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்துக்கு 2010-11-ம் ஆண்டுக்கு ரூ. 8.44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தகுதி உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் யாரேனும் இறந்தால், அன்னாரின் இறுதிச் சடங்குக்காக (அக்குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ. 24 ஆயிரத்துக்கு மிகாமல் இருப்பின்) ரூ. 2,500 உதவித்தொகை பெற, சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரிடம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக