கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த, தென்பெண்ணையாற்றின் புதிய மற்றும் பழைய பாலம் அருகில், தினமும், 200 மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுப்பதால், மண் அரிப்பு ஏற்பட்டு, பாலத்திற்கு ஆபத்து உருவாகும் நிலை உள்ளது.
சமீபத்தில் பெய்த கன மழையால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகள் முடப்பட்டன. இதனால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது தண்ணீர் வடிந்து வரும் நிலையில், பண்ருட்டி அடுத்த தென்பெண்ணையாறு, கெடிலம், மலட்டாறு பகுதியில், டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தல் நடந்து வருகிறது. அரசியல் தலையீடு காரணமாக, வருவாய்த் துறையினர் கண்டுகொள்வதில்லை.
லாரிகளை பிடித்து விŒõரிப்பது, உயரதிகாரிகளுக்கு தெரிந்தால், வழக்கு பதிவு செய்வது, இல்லையெனில், "மாமூல்' பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் போலீசார் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், தொடர் மணல் தட்டுபாடு காரணமாக, மாட்டு வண்டிக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணையாறு புதிய மற்றும் பழைய பாலம் அருகில், தினமும் 200 மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. இதனால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக