உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 24, 2010

விருத்தாசலம் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாவிடில் குடிநீர் சப்ளை துண்டிப்பு: ஆணையாளர் எச்சரிக்கை

ஸ்ரீமுஷ்ணம்:

         விருத்தாசலம் நகராட்சியில் வரிபாக்கி செலுத்தாதவர்கள் வீட்டு குடிநீர் சப்ளை துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் திருவண்ணாமலை கூறினார்.

இது குறித்து விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் திருவண்ணாமலை கூறியது:-

          விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் அரசு ஆணையின்படி 100 சதவீத வரிவசூல் செய்து முடிக்க வேண்டும். இதனால் வீட்டுவரி மற்றும் வருவாய் ஆய்வாளர், நகர அமைப்பு ஆய்வாளர்கள் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்கள் ஆகியோர் கொண்ட தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வசூல் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் வரிபாக்கி குடிநீர் கட்டண பாக்கி உள்ளவர்கள் மீது ஜப்தி, குடிநீர் சப்ளை துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிது.

               எனவே இந்த மாத இறுதிக்குள் வரி பணம் கட்ட தவறுபவர்கள் மீது இதுபோல் அதிரடியாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்த தவறியவர்களின் பெயர்கள் மற்றும் வரித்தொகை பாக்கிகளை பட்டியல் போட்டு நாளிதழில் வெளியிடப்படும்.

              விருத்தாசலம் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும்போது இறப்பு போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க நகர வியாபாரிகள், மருத்துவர்கள் நகர பொதுமக்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறு வனங்களை சேர்ந்தவர்களை முன்வைத்து சிறப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior