உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 24, 2010

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

         வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

                கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பள்ளியிறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

              மனுதாரர் முறையாகப் பள்ளியில் 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பின்னர் 10வது பள்ளியிறுதித் தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்தவர்களாக இருந்து, தமது கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல், உயிர்ப் பதிவேட்டில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் 45வயதிற்குள்ளும், இதரவகை பயனாளிகள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு நிறுவனங்களிலோ அல்லது எந்தவொரு தனியார் நிறுவனத்திலோ பணிபுரிபவராக இருக்கக் கூடாது. சுய தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

                 பள்ளி அல்லது கல்லூரியில் பயிலும் முழுநேர மாணவர்களாக இருக்கக் கூடாது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்த விவரங்கள் அடிப்படையில் தகுதி உள்ளவராக இருக்கும் மனுதாரர்கள் தங்களின் கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அசல் அடை யாள அட்டை ஆகியவற்றுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் செய்த அனைவருக்கும் தகுதி அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை அரசால் வழங்கப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior