உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 17, 2010

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட பரவனாறு சீரமைப்பு பணியை கடலூர் கலெக்டர் ஆய்வு

கடலூர்

          கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பரவனாற்றில் உடைப்பு ஏற்பட்டு சில கிராமங்களில் தண்ணீர் புகுந்தது இது பற்றி அறிந்த கலெக்டர் சீத்தாராமன் பொதுப் பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் அந்த ஆற்றின் உடைப்பை அடைக்கும் பணியை செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் பரவனாற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

                அதனைத்தொடர்ந்து திருவெண்ணைநல்லூர், ஓனாங்குப்பம் ஆகிய இடங்களில் பரவனாற்றில் நடந்த சீரமைப்பு பணியை கலெக்டர் சீத்தாராமன் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூதம்பாடி கிராமத்தில் 2 இடங்களிலும், கல்குணம், ஆடூர் அகரத்தில் 3 இடங்களிலும் நடைபெறும் சீரமைப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் கல்குணம், பூரங்குடி, ஆடூர், அகரம் ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்தார்.
 
 சீரமைப்பு பணி குறித்து கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-
 

                   மழை வெள்ளத்தால் பரவனாற்றில் 10 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சீரமைக்கும் பணி பொதுப்பணித்துறை மூலம் பணி நடைபெற்று வருகிறது. 3 தினங்களில் அனைத்து உடைப்புகளையும் அடைக்கும் பணி முடிவுற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 
               ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் செல்வராஜ், பழனிக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் கலியமூர்த்தி, பெரியசாமி, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, வேளாண்மை இணை இயக்குனர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior