உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 17, 2010

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க தீவிர நடவடிக்கை: கலெக்டர் சீத்தாராமன்


கடலூர்:
 
             வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சீத்தாராமன் கூறினார். 
 
கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

              மழை வெள்ளத்தால் சேதமடைந்த நகராட்சி சாலைகளை சீரமைக்க, தமிழக அரசு கடலூர் நகராட்சியில் 14 கி.மீட்டர் சாலை சீரமைப்பதற்கு ரூ.70 லட்சமும், சிதம்பரம் நகராட்சியில் 8 கி.மீ. தூரத்திற்கு சாலை சீரமைப்பதற்கு ரூ. 40 லட்சமும், விருத்தசாலம் நகராட்சியில 5 கி.மீ. சாலை சீரமைப்பதற்கு ரூ. 25 லட்சமும் ஆக ரூ. 1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதைபோல், கிராம ஊராட்சி சாலைகளை சீரமைப்பதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைப்பதற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

                பொதுப்பணித்துறை (நீர் ஆதாரப் பிரிவு) மூலம் வடிகால்கள், உடைப்புகள். ஏரிகள் ஆகியவற்றை தற்காலிகமாக சீரமைக்க ரூ.4.32 கோடியும் ஆக ரூ.17.67 கோடி முதல் கட்டமாக அரசிடமிருந்து பெறப்பட்டள்ளது. மேலும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைப்பதற்கு கூடுதலாக ரூ. 10 கோடி நிதி அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

              வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதற்கு ஒன்றியக் குழுத் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முழு ஒத்துமைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior