உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 17, 2010

80 காலி இடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு அடுத்த வாரம் அறிவிப்பு

                துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 80 காலி இடங்களை நிரப்ப புதிதாக குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. 
 
               துணை கலெக்டர் (ஆர்.டி.ஓ.), போலீஸ் டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், வணிகவரி உதவி கமிஷனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி (டி.எப்.ஓ.) ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.                      ஆர்.டி.ஓ., போலீஸ் துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்க துணைபதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஆகிய பதவிகளில் கடந்த ஆண்டுக்குரிய 61 காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 முதல்நிலைத்தேர்வு கடந்த மே மாதம் 2-ந்தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவு அண்மையில் வெளியானது. வெற்றிபெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு ஜனவரி மாதம் 22, 23 ஆகிய 2 நாட்கள் சென்னையில் நடத்தப்படுகிறது.                  இந்த நிலையில் இந்த ஆண்டுக்குரிய 80 காலி இடங்களை நிரப்புவதற்காக புதிய குரூப்-1 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்த உள்ளது. தேர்வு பற்றிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்பட அனைத்து விதமான பதவிகளும் இந்த நியமனத்தில் இடம்பெற்றுள்ளன.                     குரூப்-1 தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். இதற்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 மற்ற அனைத்து வகுப்பினருக்கும் 30 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆட்சியின்போது பிறப்பிக்கப்பட்ட பணிநியமன தடை சட்டத்தின் காரணமாக, தற்போதைய அரசு, எல்லா பிரிவினருக்கும் 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை வழங்கியது. இச்சலுகை இந்த பணிநியமனத்தோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior