உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஜனவரி 31, 2011

கடலூர் மாவட்டம் அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி செலவில் சாலைப்பணிகள்

நெல்லிக்குப்பம்:
 
            கடலூர் மாவட்டம் அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் கவுரிபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், துணை தலைவர் எம்.சி.சம்பந்த், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் கவுரிபாண்டியன் கூறியது:-  

              கள்ளிப்பட்டில் இருந்து ஏரிப்பாளையம் வரை ரூ.19 லட்சத்து 21 ஆயிரத்திலும், கோழிப்பாக்கத்தில் இருந்து கொங்கராயனூர் வரை ரூ.10 லட்சத்து 5 ஆயிரத்திலும், மாளிகை மேட்டில் இருந்து கோழிப்பாக்கம் காலனி வரை ரூ.26 லட்சத்து 55 ஆயிரத்திலும், பைத்தாம்பாடி காலனியில் ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்திலும், பூண்டியில் இருந்து ஏரிப்பாளையம் வரை ரூ.15 லட்சத்து 86 ஆயிரத்திலும், எஸ்.கே.பாளையத்தில் ரூ.16 லட்சத்து 12 ஆயிரத்திலும், தட்டாம்பாளையத்தில் இருந்து இராசுபாளையத்தில் ரூ.11 லட்சத்து 75 ஆயிரத்திலும் ஆக ரூ.1கோடியே 10 லட்சத்து 29 ஆயிரத்தில் தார் சாலை போட நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior