கடலூர்:
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு செல்போன் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தே கை, கால் ஊன முற்றவர்கள் மட்டும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊனத்தின் அளவு குறைந்த பட்சம் 40 சதவீதத்துக்கு குறையாமல் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியடைந்தவர்களாக இருக்க வேண்டும். 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி 3 மாத காலத்திற்கு அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது மாதம் ரூ.300 உதவித் தொகையாக வழங்கப்படும். இந்த பயிற்சி பெற விரும்பும் ஊனமுற்றவர்கள் கடலூர் புதுபாளையத்தில் உள்ள மாவட்ட ஊனமுற்ற மறுவாழ்வு அலுவலகத்திற்கு நேரில் வந்து தேசிய அடையாள அட்டை நகல், கல்விச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலரிடம் விண்ணப்பக்காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்போன் பழுதுநீக்கப் பயிற்சி பெற விரும்பும் தகுதியுள்ள ஊனமுற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக