உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 31, 2011

மத்திய அரசு நடத்தும் பேப்பர் பை, ஆபிஸ் கவர் தயார் செய்யும் பயிற்சி கடலூரில் நாளை தொடக்கம்

கடலூர்:
             மத்திய அரசு நடத்தும் பேப்பர்பை, ஆபிஸ்கவர் தயாரிக்கும் பயிற்சி கடலூரில் நடைபெற உள்ளது. மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலமாக கடலூரில் வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 5 நாட்களுக்கு இப்பயிற்சி நடைபெறுகின்றன.

              இப்பயிற்சி முகாமில் பேப்பர் காகிதபைகள் மற்றும் அலுவலக உபயோகத்திற்கான கவர்கள், பைல்கள் போன்றவற்றை தயாரிப் பதற்கான செய்முறை, செயல்முறை பயிற்சி கற்றுத் தரப்படுகின்றது. இத்தொழிலில் ஈடுபடு பவர்களுக்கு வங்கி மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவது குறித்தும் விரிவாக கற்றுத்தரப்படுகின்றது.

              கடந்த மாதத்தில் கடலூர் மாவட்ட கலெக்டர் கேரிபேக் (பிளாஸ்டிக்பை) உபயோகிப்பதற்கான தடை உத்தரவை அமல்படுத்தியுள்ள காரணத்தினால் இந்த பயிற்சி கடலூர் மாவட்டத்திற்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என மூலிகை அக்குபஞ்சர் வல்லுனர் டாக்டர் ரவி தெரிவித்தார்.

            5 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சிக்கு 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நபர் ஒருவருக்கு பயிற்சிக் கட்டணம் ரூ.700 மட்டுமே. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9994711180, 9367622255. முன் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior