கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குப், பாத யாத்திரை சென்ற 1,000 பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள, கிராமங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்சியை அடுத்த, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குப் பாத யாத்திரை சென்று, தங்கள் நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று துவங்கியது. பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை போட்டு விரதமிருந்து, நேற்று பாத யாத்திரையைத் துவக்கினர். முன்னதாக பாத யாத்திரை செல்லும் 1,000 பக்தர்களும் நேற்று காலை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சமயபுரம் மாரியம்மனின் படத்தை வைத்து அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளைச் செய்தனர். பின் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு தங்கள் பாத யாத்திரையைத் தொடங்கினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக