கடலூர் :
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வரும் 12ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டல பொது மேலாளர் உதயசூரியன் கூறியது:
தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. வெளியூர்களில் வசித்து வருபவர்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த கிராமங்களில் கொண்டாட வசதியாக வரும் 12ம் தேதி முதல் 17ம் தேதிவரை கடலூர் மாவட்டத்தில் முக்கிய நகர்களில் இருந்து சென்னைக்கு 110 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பஸ்கள் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி டவுன்ஷிப், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேப்போன்று சேலம், திருச்சி, வேலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
வரும் 19ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கும், 20ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு வடலூருக்கு தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு மண்டல மேலாளர் உதய‹ரியன் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக