உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 11, 2011

கடலூர் மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்காமல் அலைக்கழிக்கப்படும் மாணவர்கள்!

சிதம்பரம்:

             கடலூர் மாவட்டத்தில் 2010-11 கல்வியாண்டில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு ஒரு செமஸ்டர் தேர்வு முடிந்தும் மாணவர்களுக்கு கல்விக் கடனை வழங்காமல் வங்கி அதிகாரிகளால் அலைகழிக்கப்படுகிறார்கள்.

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.எஸ்சி வேளாண்மை, எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்பிஏ. பிசிஏ ஆகிய வகுப்புகளில் சுமார் 3ஆயிரம் பேர் பயில்கின்றனர். இதேபோன்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். டிசம்பர் மாதத்துடன் முதல் செமஸ்ட் தேர்வு முடிந்துவிட்டது. ஆனால் இதுவரை மாணவர்களுக்கு வங்கிகள் கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது.

           இதனால் கிராமப்புற, நகர்ப்புறத்தில் வசிக்கும் ஏழை-எளிய மாணவர்கள் பெரிதும் பரிதவிப்பில் உள்ளனர். கல்விக்கடன் வழங்காததை கண்டித்து சமீபத்தில் புவனகிரி, குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வங்கிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சில வங்கிகளில் கல்விக் கடனை விரைந்து வழங்குவதில்லை. மாணவர்களை அலைக்கழிப்பதுடன், குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டுமே வழங்குகின்றதாக கூறப்படுகிறது.

           குறிப்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கிறது. விருத்தாசலத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பெயரளவுக்கே கல்விக்கடன் வழங்கப்பட்டன. அதன் பின்னர் யாருக்கும் கல்விக்கடன் வழங்கப்படவில்லை என முகாமில் பங்கேற்று விண்ணப்பித்த பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். கல்விக்கடன் குறித்து வங்கிகளில் விளம்பர பலகை வைக்க வேண்டும். கல்விக்கடன் குறித்து சிறப்பு ஆய்வை ஆட்சியர் தொடங்க வேண்டும்.

               தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கல்விக்கடன் வழிகாட்டுதல் மையம் அமைத்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். கல்வி நிறுவனங்களில் கல்விக் கடன் உதவி, சேவை முகாம்களை நடத்திட வேண்டும் என்பன பெற்றோர்களின் கோரிக்கையாகும். எனவே வங்கி அதிகாரிகள் மனிதநேயத்துடன் மாணவர்களை அனுகி கல்விக்கடன் வழங்க உதவ முன்வர வேண்டும் என சமூக ஆர்வவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior