உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஜனவரி 11, 2011

கடலூரில் போலீஸ் குடியிருப்பில் உள்ள சாலைகள் ரூ.5 லட்சம் செலவில் சீரமைக்கப்படும்; அஸ்வின் கோட்னீஸ்

கடலூர்: 
 
              கடலூரில் ரூ.5 லட்சம் செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலீசார் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் தின விளையாட்டு போட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடந்தது.

                இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசின் மனைவி அதிதி துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தொடங்கி வைத்தார். இதில் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான கைப்பந்து, கபடி, கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகளும், காவலர்களின் மனைவிகளுக்கான கோலம், லக்கி கார்னர், பொங்கல் வைக்கும் போட்டி, வளையங்கள் எறியும் போட்டி, ஆண்களுக்கான பானை உடைத்தல், கைகளை கட்டிக்கொண்டு சுழலும் நீரில் உள்ள எலுமிச்சம்பழத்தை வாயால் எடுத்தல் ஆகிய போட்டிகளும், குழந்தை களுக்கான தவளை ஓட்டம், இசைப்பந்து, சாக்லட் ஓட்டம், உருளை சேகரித்தல், மரத்துண்டின் மேல் ஓட்டம், 3 கால் ஓட்டம், எலுமிச்சை கரண்டி ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

             பரிசளிப்பு விழா போட்டி களில் வெற்றி பெற்ற போலீஸ்காரர்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா மாலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது கடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படும். அதேபோல பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் நூலகமும் அமைக்கப்படும்.

               இது தவிர காவலர்களுக்கு 110 வீடுகள் கட்டுவதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது என தெரிவித்தார். விழாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போலீஸ்காரர்களின் மகன் மற்றும் மகள்கள் உள்பட 64 பேருக்கு பரிசுத்தொகையை வழங்கினார். மேலும் தொடர்ந்து கும்மி, கோலாட்டம், நாட்டுப்புற பாடல்கள் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், சிலம்பம், குத்துச்சண்டை, தீப்பந்தம் ஆகிய வீர விளையாட்டுகளும் நடைபெற்றன.

               இதில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பாண்டியன், மணி, காமராஜ், இன்ஸ்பெக்டர் மணவாளன், தனிப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தீபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior