கடலூர்:
இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற புதிய வாக்காளர்களுக்கு வருகிற 25-ந் தேதி அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் புகைப்படத் துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்ற சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரிகளும், நகரங்களில் பில் கலெக்டர் களும் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று அடையாள அட்டைகளை வினி யோகித்து வருகின்றனர். இதற்கிடையே 1-1-2011-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு தயாரிக்கப்பட்ட துணை வாக்காளர் பட்டியலுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த துணை வாக்காளர் பட்டியலில் இடம் பெற் றுள்ள 49 ஆயிரத்து 976 வாக்காளர்களுக்குரிய அடையாள அட்டைகள் வருகிற 25-ந்தேதி நடை பெறும் தேசிய வாக்காளர் தின விழாவின்போது வழங்கப்பட உள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
தேசிய வாக்காளர் தின விழாவை ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் கொண்டாடுமாறும், ஒரே பள்ளிக்கூடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தால் அனைத்து வாக்குச்சாவடிக்கும் சேர்த்து ஒரே இடத்தில் விழா நடத்துமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியரை முதன்மை விருந்தினராக அழைத்து அவர் மூலம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குமாறும், இந்த விழாவில் அரசியல் வாதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டாலும், அவர்களுக்கு மேடையில் இருக்கை வழங்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக