உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 07, 2011

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு: 10 லட்சம் ஹால் டிக்கெட்டுகள் விநியோகம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வி.ஏ.ஓ. பணியிடத் தேர்வுக்கான தேர்வுக்கூடச் சீட்டுகளை தேர்வு எழுதுபவர்களுக்கு தபாலில் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர் 
 
                தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கான 10 லட்சம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) அஞ்சலகங்கள் மூலம் நேரடியாக விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. 
 
                தமிழகம் முழுவதும் வி.ஏ.ஓ. பணியிடத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகளை 10 லட்சம் பேர் எழுத உள்ளனர்.  இந்த விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களது பெயர், இல்ல முகவரி குறிப்பிடப்பட்ட, தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை தேர்வாணையம் அச்சிட்டு வழங்கியுள்ளது. இந்தத் தேர்வுக் கூடச் சீட்டுகள், முகவரி தெரியும் வகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உறைகளில் இட்டு, சான்றிதழ் பதிவு தபாலில் அனுப்புவதற்காக அஞ்சல் துறையுடன், தேர்வாணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. 
 
             இதன்படி, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அஞ்சலகத்தில்,தேர்வுக் கூடச் சீட்டுகள் கட்டுக் கட்டாகக் குவிந்துள்ளன. இந்தக் கட்டுகளைப் பிரித்து, கடந்த 3-ம் தேதி முதல் (விடுமுறை நாள்கள் உள்பட) தேர்வுக்கூடச் சீட்டுகளை அனுப்பும் பணியில் 50 தபால் ஊழியர்கள் "ஷிஃப்ட்' முறையில் ஈடுபட்டுள்ளனர்.  
 
இதுகுறித்து, சென்னை மத்திய கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஆர். வெங்கட்ராமன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 
 
             தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட பணியிடத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கெனவே அஞ்சல் துறை மாநிலம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் விற்பனை செய்துள்ளது.  இதன் தொடர்ச்சியாக இப்போது வி.ஏ.ஓ. பணியிடத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பும் 24 மணி நேர சேவையில் தபால் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.  
 
அஞ்சல் துறைக்கு ரூ. 1 கோடி வருவாய்: 
 
                  சென்னையில் கிரீம்ஸ் சாலை அஞ்சலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள 93 தலைமை அஞ்சலகங்கள், 20 ஆயிரம் கிளை அஞ்சலகங்கள் மூலம் நகரம் முதல் குக்கிராமங்கள் வரை அடுத்த 3 நாள்களில் இந்த தபால்கள் விநியோகிக்கப்பட்டுவிடும்.  இதன் உறைகளின் மீது, அவசரம், குறுகிய காலத்துக்குள் சேர்க்கவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் இந்த தேர்வுக்கூடச் சீட்டுகளை விநியோகிப்பதன் மூலம் அஞ்சல் துறைக்கு ரூ. 1 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  இதே போல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளுக்கான தேர்வுக்கூடச் சீட்டுகளையும் இனி அஞ்சல் துறை விநியோகிக்க உள்ளது என்றார் வெங்கட்ராமன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior