உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 07, 2011

63 நாயன்மார்கள் வரலாற்றை நூலாக வெளியிட முடிவு



 சிதம்பரம்:

             அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை, அனைவரும் படிக்கும் வகையில் நூலாக தொகுத்து வெளியிடுவது' என, சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழக மாநில மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

            சிதம்பரத்தில் சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் சார்பில், இரண்டு நாட்கள் மாநில மாநாடு நேற்று நிறைவு பெற்றது. காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் திருவம்பல தேசிக ஞானபிரகாச பராமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். சிதம்பரம் மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள், சென்னை நிடுமாமிடி மடம் விரேஷ்வர தேசிகேந்திர சுவாமிகள், துழாவூர் ஆதீனம் நிரம்ப அழகிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள், தமிழக தெய்வீக பேரவைத் தலைவர் அர்ஜூன் சம்பத், அகில இந்திய ஆன்மிக அறிஞர்கள் கூட்டமைப்பு ராஜன் ஆகியோர் ஆன்மிக உரையாற்றினார்.

             சத்தியநாராயணன், இலங்கை ரத்தினம்பிள்ளை யோகா, தியானம் தலைப்புகளில் பேசினர். சேக்கிழார் பண்பாட்டுக் கழக பொதுச் செயலர் விஜயகுமார், மாநிலத் தலைவர் சண்முக சுந்தரம், உயர் மட்ட குழு உறுப்பினர் அட்சயலிங்கம் மற்றும் மாநாட்டு குழுவைச் சேர்ந்த ரத்தினசபாபதி, செந்தில்குமார், ஜோதி குருவாயூரப்பன், முத்து கணேசன், சுவாமிநாதன், முத்துக்குமாரசாமி உள்ளிட்டவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

              மாநாட்டில் சேக்கிழார் அவதரித்த சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க, தமிழக முதல்வரை வலியுறுத்துவது. 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை எளிமைபடுத்தி ஒரே நூலாக்கி உலக வாழ்வியலுக்கு உகந்த வண்ணம் வெளியிடுவது. உலக அமைதி, நன்மைக்காகவும் விழிப்புணர்வை உண்டாக்க, ஆன்மிக பேரவைகளை நடத்துவது உட்பட பல்@வறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior