உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், பிப்ரவரி 01, 2011

கடலூர் அருகே ஓடும் பேருந்துலிருந்து குதித்த மாணவர் சாவு

கடலூர் : 

           கடலூர் அருகே ஓடும் பேருந்துலிருந்து  ஜன்னல் வழியே குதித்த பள்ளி மாணவர் இறந்தார். 

            கடலூர் முதுநகர் அடுத்த காரைக்காடு அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் மகன் ராகுல்காந்தி (19). கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை கண்ணாரப்பேட்டையில் நடந்த தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பின்னர் கடலூரில் இருந்து வேகாக்கொல்லை செல்லும் அரசு டவுன் பஸ்சில் நண்பர்களுடன் வீடு திரும்பினார். பஸ்சில் டிக்கெட் எடுக்காததால் கண்டக்டருக்கும், ராகுல்காந்திக்கும் தகராறு ஏற்பட்டது. 

             இதற்கிடையே காரைக்காடு பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காததால் ராகுல்காந்தி பஸ்சில் இருந்து ஜன்னல் வழியாக திடீரென குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ராகுல்காந்தி இறப்புக்கு காரணமான டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் இரவு 9 மணிக்கு காரைக்காடு பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இம்மறியல் போராட்டத்தால் கடலூர் - விருத்தாசலம் சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior