நெல்லிக்குப்பம் :
தமிழக அரசு மூலம் வழங்கப்படும் இடுபொருட்களை எளிதாக பெற விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு "ராஜராஜன் 1000' நெல் நடவு, பயிறு வகை பயிர்களுக்கு இலவசம் மற்றும் மானிய விலையில் இடுபொருட்களும், சொட்டு நீர் உட்பட பல திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இவற்றை பெற ஒவ்வொரு முறையும் பல்வேறு விவரங்களை விவசாயிகள் வழங்க வேண்டியுள்ளது. இதற்காக செலவு அதிகமாவதுடன், நேரமும் விரயமாகிறது.
இதனைத் தவிர்க்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள அட்டை வழங்கி அதில் விவசாயி பெயர், வங்கி கணக்கு எண், நிலத்தின் சர்வே எண் போன்ற விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து விட்டால் போதும், அதன் பிறகு விவசாயிகள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து விவசாய டெப்போவில் இடுபொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக ஒவ்வொரு முறையும் அதிகாரிகளை பார்க்கத் தேவையில்லை. எளிதாக இடுபொருட்களை பெறமுடியும். மானிய தொகைகள் மற்றும் நிவாரண நிதிகளை இனி விவசாயிகள் வங்கிகளில் நேரடியாக பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். அண்ணாகிராமம் வட்டாரத்தில் 5,600 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை உதவி இயக்குனர் சம்பத்குமார் செய்து வருகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக