உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், பிப்ரவரி 01, 2011

சூரிய சக்தியில் இயங்கும் மொபைல்போன் அறிமுகம் : வோடபோன்

            சூரிய சக்தியில் இயங்கக் கூடிய வகையிலான மொபைல் போன்களை இந்தியாவின் முன்னணி தொலை‌தொடர்பு நிறுவனமான வோடபோன் எஸ்ஸார் நிறுவனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

           சென்னையில் உள்ள பழைய தலைமைச் செயலகத்தில், மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வோடபோன் தமிழ்நாடு சர்க்கிள் உயர் அதிகாரி சுரேஷ்குமார் மொபைல்போன்களை அறிமுகப்படுத்தினார்.


இந்த அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு வோடபோன் தமிழ்நாடு சர்க்கிள் உயர் அதிகாரி சுரேஷ் குமார், 

       சூரிய ஒளியின் மூலம் சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‌மொபைல்போன்கள் விரைவில் விற்பனைக்கு வரும்.  மலைப்பகுதி, வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் எலெக்டிரிக் லைட் மூலமும் இந்த மொபைல்போன் சார்ஜ் ஏறும். 

            இதுபோன்ற சிறப்பான வசதிகள் கொண்ட சோலார் சார்ஜிங் மொபைல்போனின் விலை, ரூ. 1,500 என அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior