உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், பிப்ரவரி 01, 2011

கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் "ஒன்டே விசிட்' முறை அமல்

           "தத்கல்" முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுக்கு, ஒரே நாளில் அனைத்து ஆய்வுகளையும் முடிக்கும் வகையில், "ஒன் டே விசிட்' எனப்படும் புதிய முறை, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

            கோவை பாஸ்போர்ட் அலுவலகம், 2008 செப்., 15ல் துவக்கப்பட்டது. கடந்த வாரம் வரையிலும் 1 லட்சத்து 10 ஆயிரம் சாதாரண பாஸ்போர்ட்களும், 47 ஆயிரம், "தத்கல்' பாஸ்போர்ட்களும், 1,500 ஜம்போ பாஸ்போர்ட்களும் வினியோகிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள, "தத்கல்' பாஸ்போர்ட்களுக்கு, "ஒன் டே விசிட்' என்ற புதிய முறை, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவை நேற்றிலிருந்து அமல்படுத்தப்பட்டது. "தத்கல்' முறையில் விண்ணப்பிப்போருக்கு, அதே நாளிலேயே விண்ணப்பத்திலுள்ள விவரங்களும், ஆவணங்களும் சரி பார்க்கப்படும்.

             காலையில் உதவி பாஸ்போர்ட் அலுவலரும், மதியத்திலிருந்து மாலை வரை பாஸ்போர்ட் அலுவலரும் விண்ணப்பதாரர்களைச் சந்தித்து, ஆவணங்களைப் பரிசோதிப்பர். இந்த ஆய்வுகள் முடிந்த பின், விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு மீண்டும் வர வேண்டிய அவசியம் இல்லை. 

              ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்ட பின், அடுத்த ஓரிரு நாட்களிலேயே பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, தபாலில் அனுப்பப்படும். இதுவரை, "தத்கல்' முறையில் விண்ணப்பிப்போருக்கு ஒரு வாரத்திலிருந்து 10 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைத்து வருகிறது. புதிய நடைமுறையினால், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைத்து விடும் வாய்ப்புள்ளது. இதனால், கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில், "தத்கல்' முறையில் பாஸ்போர்ட்டுக்கு நேற்று விண்ணப்பித்த பலரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior