கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நவீன தெளிப்பான் கருவிகள் பற்றி, விவசாயிகளுக்கு புதன்கிழமை வேளாண் அலுவலர்கள் செயல் முறை விளக்கம் அளித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தற்போது குறைந்த தூரத்துக்கு தண்ணீரைத் தெளிக்கும் தெளிப்பான் கருவிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது ரெயின் கன் என்ற சக்தி வாய்ந்த தெளிப்பான் கருவி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் 40 மீóட்டர் தூரம் வரை தண்ணீரைத் தெளிக்க முடியும். கரும்பு வயல்கள், மலர்த் தோட்டங்கள், காய்கறித் தோட்டங்கள் போன்றவற்றுக்கு இது பயன் உள்ளதாக இருக்கும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கதிறார்கள்.
ஒரு ஏக்கருக்கு நீர் பாசனம் செய்யும் வகையில் இந்த தெளிப்பான் கருவிக்குச் செலவு ரூ. 21 ஆயிரம். இதில் 50 சதவீதம் மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ரெயின் கன் தெளிப்பான் கருவிகளை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கும் நிகழ்ச்சி, கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் புதன்கிழமை நடந்தது. வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில், துணை இயக்குநர்கள் சந்திரசேகரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன், பட்டாம்பாக்கம் விவசாயி அறவாளி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக