உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 11, 2011

கடலூருக்கு மென்பொருள் பூங்கா சட்டசபையில் அய்யப்பன் வலியுறுத்தல்

கடலூர் : 

       கடலூருக்கு மென்பொருள் பூங்கா அமைத்துத் தரவேண்டும் என சட்டசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

சட்டசபை கூட்டத்தில் கடலூர் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியது: 

         கடலூர் மாவட்டத்திற்கு பெருமைச் சேர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தாசில்தார் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட புதிய கட்டடங்களை அரசு கட்டித் தந்துள்ளது. இதற்காக கடலூர் தொகுதி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

             மேலும் கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தாழங்குடாவில் இருந்து தேவனாம்பட்டினம் வரை கருங்கற்கள் கொட்டி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

               அதே போல் தேவனாம்பட்டினத்தில் இருந்து அக்கரைகோரி வரை கருங்கற்களை கொட்டி தடுப்புச் சுவர் அமைத்து மீனவ மக்களை காப்பாற்ற வேண்டும். கடலூர் பின் தங்கிய மாவட்டமாக உள்ளதால் கடலூருக்கு மென்பொருள் பூங்காவை முதல்வர் உருவாக்கித் தரவேண்டும். அதே போல் நீண்ட நாளைய கோரிக்கையாக உள்ள கலெக்டர் அலுவலகத்தை மாற்றி புதிய கட்டடமாக மாற்றித் தரவேண்டும். 

               கம்மியம்பேட்டைச் சாலையை தார் சாலையாக மாற்றித் தரவேண்டும். கடலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாளைய மருத்துவக் கல்லூரி கோரிக்கையை நிறைவேற்றி தந்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும், சுகாதார அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior