உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 25, 2011

என்.எல்.சி. பாராமுகமாக இருப்பது ஏன்?: கி.வீரமணி

நெய்வேலி:

 திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

               நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் பணியாற்றியிருந்தும் ஓய்வூதியம் இன்றி வெறுங்கையோடு திரும்பியோர்களின் நிலை கவனிக்கப்படவேண்டும். இவ்வளவுக்கும் என்.எல்.சி. என்பது இலாபம் கொழிக்கச் செய்யும் நவரத்தினங்களுள் ஒன்றாகும்.

           இந்த நிலைக்குக் காரணம் அந்நிறுவனத்தில் அயராது பணியாற்றிய தோழர்களின் விலை மதிக்கமுடியாதபேருழைப்பாகும். 1995 ஓய்வூதிய திட்டத்தில் என்.எல்.சி. நிறுவனமும், திருச்சி பிராவிடண்ட் ஃபண்டு ஆணையமும் உரியகாலத்தில் ஊழியர்களைச் சேர்க்காதது ஊழியர்களின் குற்றமல்ல; அவர்கள் செய்த தவறுக்குப் பாதிப்பினைச்சந்திப்பவர்கள் ஊழியர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

                  ஓய்வூதியம் பெற்றிட இயலாமல் வயது 70 முதல்80 வயதுவரை கடந்துகொண்டு இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் என்பது அவர்களின் வயோதிகக் காலத்திற்கு உதவும் கைத்தடியாக இருக்கும். நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தும்கூட என்.எல்.சி. பாராமுகமாக இருப்பது - ஏன்? மற்ற மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் (ஓ.என்.ஜி.சி. போன்றவைகளில்) ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில், என்.எல்.சி., ஊழியர்களுக்கு மட்டும் அது கிடைக்காதது ஏன் என்பது நியாயமான கேள்வியாகும்!

                  ஓய்வூதியமோ, உதவித் தொகையோ அல்லது கருணைத் தொகையோ ஏதோ ஒரு பெயரில் பல்லாண்டுகாலம் உழைத்தோருக்கு அளிக்கப்படுவதுதான் நியாயமும், மனிதநேயமும் ஆகும்.  மத்திய அரசு ஆவன செய்யவேண்டும். நமது முதலமைச்சர் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ள என்.எல்.சி.ஊழியர்களின் இந்தப் பிரச்சினையைக் கவனிக்கவேண்டும். மத்திய அரசுக்குத் தெரிவித்து ஆவனசெய்யவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior