உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 25, 2011

கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் லேப்-டாப், வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவு கண்காணிப்பு

கடலூர்:

                இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில், லேப்-டாப், வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார்.  

ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  

              சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதனகிழமை நடந்தது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த மற்றும் மிகப் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் முதல் முறையாக, லேப்-டாப் மற்றும் வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  ÷கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த, மிகப் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளைத் தேர்வு செய்து, அவற்றில் லேப்-டாப் மற்றும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். 

             மேற்கண்ட வாக்குச் சாவடிகளில் லேப்-டாப், வெப் கேமரா பொருத்துவது மூலம், வாக்குப் பதிவு தொடங்கியது முதல் எவ்விதத் தடங்கலும் இன்றி வாக்குப் பதிவு நடைபெறுகிறதா என்றும், வாக்குப் பதிவு முகவர்களும், அலுவலர்களும், சரியாக வாக்குப் பதிவை நடத்துகிறார்களா என்றும், சென்னை மற்றும் புதுதில்லியில் உள்ள தேர்தல் ஆணையம் நேரிடையாகக் கண்காணிக்க முடியும். வாக்குப் பதிவு குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் உள்ள வெப் கேமராவை பார்வையிட்டு வாக்குப் பதிவு முறையாக நடைபெறுவதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றார் ஆட்சியர்.  

                வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, மாணவ, மாணவியரிடையே வாக்குப் பதிவின் முக்கியத்துவத்தை, வலியுறுத்த வேண்டும். கணினி படிப்பு முடித்த மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ, மநாணவியர் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுப டுத்தப்பட உள்ளனர் என்றும் ஆட்சியர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.  கூட்டத்தில் மாவட்டக் கூடுதல் ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, 10-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior