உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், பிப்ரவரி 02, 2011

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு பயிலரங்கம்

விருத்தாசலம்:

          விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், பத்து நாள் பயிலரங்கத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

          விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் தமிழ்த் துறை சார்பில், தொல்காப்பிய இலக்கியவியல் கொள்கைககளும் கோட்பாடுகளும் எனும் தலைப்பில் ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில், திருவள்ளுவர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜோதிமுருகன் சிறப்புரை ஆற்றினார்.

                விழாவில், பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் கருணாநிதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மனோன்மணி தலைமை ஏற்றார். தமிழ்த் துறைத் தலைவர் முத்தழகன், திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் முனைவர் வணங்காமுடி, பேராசிரியர் அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .பேராசிரியர்கள் ராஜசேகர், ராணி, புவனேஷ்வரி, சிவக்குமார், வேணி, சாலமன், மருதமுத்து, ராஜா, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளங்கலை துறைத் தலைவர் தண்டபாணி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior