தினசரி வாழ்க்கையில் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், பயன்பாட்டு முறைகள் இவற்றில் எதாவது ஒன்றை மறக்கிறோம் அல்லது பயன்பாட்டில் இருந்து மறைந்து விடுகிறது. உதாரணமாக தமிழர் கலாச்சாரம், நாகரீகம் என்ற பெயரில் உடை, உணவு, பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறுகிறது அல்லது மாற்றபடுகிறது, ஒரு தலை முறையினர் பயன்படுத்தியவை அடுத்த தலை முறையினரால் ஏற்றுகொள்ள முடியாத அல்லது வாழ்க்கைக்கு ஒத்து வராத ஒன்றாக இருக்கிறது.
இந்தமாற்றத்தினை தவிர்க்க முடியாது அல்லது மாற்ற முடியாது. ஒரு காலத்தில் சென்னை வானொலி அலைவரிசையைத்தான் நாம் கேட்டு இருப்போம். அனால் காலத்தின் மாற்றம் அல்லது அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இன்று பண்பலை அலைவரிசை மக்களால் பயன்படுத்தபட்டு வருகிறது. அனால் இவற்றின் அடிப்படை மக்களின் தேவையே.
இது தொடர்பாக வரும் நாட்களில் மறைந்து போனதும் மறந்து போனதும் புதிய தொடர் எழுத உள்ளேன். உங்களது வாழ்கையில் நீங்கள் பயன்படுத்திய ஒன்று இன்று மாற்றம் பெற்று இருக்கலாம் அல்லது மறைந்து இருக்கலாம் , அவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம், உங்களது கருத்துக்கள் எதிர்பார்த்து மறைந்து போனதும் மறந்து போனதும் இளமைக்கால நினைவுகளோடு..............
0 கருத்துகள்:
கருத்துரையிடுக