உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, மார்ச் 25, 2011

2011 உலகக் கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் ஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா


ஆமதாபாத்:

            உலகக் கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது.  
 
               பின்னர் ஆடிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.  பாண்டிங் சதம்  ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. வாட்சன் 25 ரன்களில் அஸ்வீன் பந்துவீச்சில் போல்டு ஆனார். தொடர்ந்து மோசமாக ஆடியதால் விமர்சனத்துக்குள்ளான பாண்டிங், மிகவும் கவனமுடன் விளையாடினார்.  இதனிடையே ஹாடின் அரைசதமடித்தார். அணியின் ஸ்கோர் 110 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியை யுவராஜ் பிரித்தார். 
 
               67 பந்துகளில் அரைசதமடித்த பாண்டிங் 113 பந்துகளில் சதமடித்தார். அவர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் டேவிட் ஹசி சற்று அதிரடியாக விளையாடியதால் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது.  இந்தியா வெற்றி  பின்னர் பேட் செய்த இந்திய அணியில் சேவாக் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சச்சின் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.  சச்சின் அடித்த 94-வது அரைசதம் இது. கம்பீர் 50 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். 
 
               பின்னர் ஜோடி சேர்ந்த யுவராஜும், ரெய்னாவும் அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர்.  யுவராஜ் அரைசதமடித்தார். பிரட் லீ வீசிய 46-வது ஓவரில் ரெய்னா சிக்ஸர் ஒன்றை தூக்கினார். பிரட் லீயின் 48-வது ஓவரில் யுவராஜ் பந்தை பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 261 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. யுவராஜ் சிங் 57 ரன்களுடனும், ரெய்னா 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  பேட்டிங்கில் 57 ரன்களை குவித்ததோடு, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய யுவராஜ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 
 
 பாகிஸ்தானுடன்...  
 
மார்ச் 30-ம் தேதி மொஹாலியில் நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா.  
 
 ஸ்கோர் போர்டு  ஆஸ்திரேலியா  
 
வாட்சன் (பி) அஸ்வின் 25 (38)  
ஹாடின் (சி) ரெய்னா (பி) யுவராஜ் 53 (62) 
பாண்டிங் (சி) ஜாகீர்கான் (பி) அஸ்வின் 104 (118)  
கிளார்க் (சி) ஜாகீர்கான் (பி) யுவராஜ் 8 (19)  
மைக் ஹசி (பி) ஜாகீர்கான் 3 (9) 
 ஒயிட் (சி) & (பி) ஜாகீர்கான் 12 (22)  
டேவிட் ஹசி நாட் அவுட் 38 (26) 
 ஜான்சன் நாட் அவுட் 6 (6)  
 
உதிரிகள் 11  
 
மொத்தம் (50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு) 260  
 
விக்கெட் வீழ்ச்சி: 
 
1-40 (வாட்சன்),
2-110 (ஹாடின்), 
3-140 (கிளார்க்), 
4-150 (மைக் ஹசி),
5-190 (ஒயிட்), 
6-245 (பாண்டிங்). 
 
 பந்துவீச்சு:  
 
அஸ்வின் 10-0-52-2 
ஜாகீர்கான் 10-0-53-2  
ஹர்பஜன் 10-0-50-0 
படேல் 7-0-44-0 
 யுவராஜ் 10-0-44-2 
சச்சின் 2-0-9-0  
கோலி 1-0-6-0  
 
இந்தியா  
 
சேவாக் (சி) மைக் ஹசி (பி) வாட்சன் 15 (22)  
சச்சின் (சி) ஹாடின் (பி) டெய்ட் 53 (68)  
கம்பீர் ரன்அவுட் (ஒயிட்/டேவிட் ஹசி) 50 (64)  
கோலி (சி) கிளார்க் (பி) டேவிட் ஹசி 24 (33)  
யுவராஜ் நாட் அவுட் 57 (65)  
தோனி (சி) கிளார்க் (பி) பிரட் லீ 7 (8) 
 ரெய்னா நாட் அவுட் 34 (28)  
 
உதிரிகள் 21 
 
 மொத்தம் (47.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு) 261  
 
விக்கெட் வீழ்ச்சி:
 
1-44 (சேவாக்), 
2-94 (சச்சின்), 
3-143 (கோலி),
4-168 (கம்பீர்), 
5-187 (தோனி). 
 
 பந்துவீச்சு:
 
பிரட் லீ 8.4-1-45-1 
டெய்ட் 7-0-52-1  
ஜான்சன் 8-0-41-0 
வாட்சன் 7-0-37-1  
கிரெஜா 9-0-45-0 
கிளார்க் 3-0-19-0  
டேவிட் ஹசி 5-0-19-1

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior