உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, மார்ச் 25, 2011

கடலூர் மாவட்டத்தில் இலங்கை அகதிகளிடம் ஐ.நா., அமைப்பு நேர்காணல்

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தில் வாழும், இலங்கை அகதிகள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை உயர் ஸ்தானிக அமைப்பினர் கடலூரில் நேற்று நேர்காணல் நடத்தினர்.

                     தமிழகத்தில் 112 அகதிகள் முகாம் உள்ளது. இதில் 68 ஆயிரம் பேர் அதிகளாக உள்ளனர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு, கடந்த 2009ம் ஆண்டு தமிழக முகாம்களிலிருந்து 800 பேரும், கடந்த ஆண்டு 2,000 பேரும் சொந்த நாட்டிற்கு திரும்பினர். இந்த ஆண்டு இதுவரை 420 பேர் திரும்பியுள்ளனர்.கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, அம்பலவாணன்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள, 31 குடும்பங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப மனு தாக்கல் செய்தனர்.

                இதைத் தொடர்ந்து நேற்று கடலூர் கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் உள்ள, மக்கள் குறைதீர் மன்ற அரங்கில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உயர் ஸ்தானிக அமைப்பின் பார்வையாளர் ஜெனிபர், டில்லி அதிகாரி விஜயபாரதி மற்றும் அதிகாரிகள், மனு செய்த 31 குடும்பத்தினர் மற்றும் நேரில் வந்து ஆஜரான 10 குடும்பத்தினர் உட்பட மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior