உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 25, 2011

கடலூரில் கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் விதித்த 3 நிபந்தனைகள்

கடலூர்:

           கடலூரில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் கருணாநிதி தங்குவதற்கு 3 நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் புதன்கிழமை விதித்தது. இதனால் அவர் அங்கு செல்லாமல்  சிதம்பரத்துக்கு புறப்பட்டு சென்றார்.   

                 முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்காக, புதன்கிழமை சென்னையில் இருந்து காரில் திருவாரூர் புறப்பட்டுச் சென்றார்.    வழியில் அவர் கடலூரில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக அரசு விருந்தினர் மாளிகையில் ஒரு அறை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அறை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் சார்பில், மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் 3 நிபந்தனைகளை விதித்திருந்தார். நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அறை ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

 3 நிபந்தனைகள்:    


விருந்தினர் மாளிகையில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது, 
அரசியல் கட்சியினரைச் சந்திக்கக் கூடாது. 
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது என்பன.  

              விருந்தினர் மாளிகையில் முதல்வர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால், செய்தியாளர்கள் சிலர் புதன்கிழமை அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அவர்கள் போலீசாரால் தடுக்கப்பட்டனர்.    

                 இதற்கு பதிலளித்த ஆட்சியர், முதல்வருக்கே 3 நிபந்தனைகள் விதித்து இருக்கிறோம்.  அதேநேரத்தில், முதல்வர் கருணாநிதி, கடலூர் விருந்தினர் மாளிகைக்குச் செல்லாமலேயே சிதம்பரம் சென்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior