25 காசு மற்றும் அதற்கும் குறைவான மதிப்புடைய நாணயங்களை புழக்கத்தில் இருந்து அகற்றி விட அரசு முடிவு எடுத்து உள்ளது. இந்திய நாணய சட்டம் 1906 ன் கீழ், வரும் ஜுன் 30ந் தேதிக்கு பிறகு இந்த நாணயங்கள் செல்லாது. இவற்றை வங்கிகளிலும் மாற்றிக் கொள்ள முடியாது. சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகளில் பொதுமக்கள் இந்த நாணயங்களை தற்போது மாற்றிக் கொண்டு அவற்றுக்கு இணையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக