உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், மார்ச் 08, 2011

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நாளை முதல் நுழைவுச் சீட்டு வழங்கல்

கடலூர் : 
    
              பத்தாம் வகுப்பு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தனித் தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு நாளை (9ம் தேதி) முதல் 11ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

கடலூர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் ராமச்சந்திரன் செய்திக்குறிப்பு:

                 பத்தாம் வகுப்பு, மெட்ரிக், ஆங்கிலோ - இந்தியன் பொதுத் தேர்வுகள் வரும் 22ம் தேதி முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது. பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கான அனுமதிச் சீட்டு வரும் நாளை 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு காரைக்கால் கல்வி மாவட்டத்திற்கு கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளி, புதுச்சேரி மாவட்டத்திற்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க., அரசு உயர்நிலைப் பள்ளி, திண்டிவனம் மாவட்டத்திற்கு வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் மாவட்டத்திற்கு எம்.ஆர்.ஐ. சி.ஆர்.சி., உயர்நிலைப் பள்ளி, விருத்தாசலம் மாவட்டத்திற்கு இன்பேன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடலூர் மாவட்டத்திற்கு சி.கே (பாபா) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

                மெட்ரிக் தனித் தேர்வர்களுக்கு புதுச்சேரி நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு, மெட்ரிக் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு கிடைக்காதவர்கள் கடலூர் அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தையும், ஆங்கிலோ - இந்தியன் அனுமதி சீட்டுகள் கிடைக்காதவர்கள் சென்னை, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு ராமச்சந்திரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior