கடலூர் :
சுதந்திரத்திற்கு பிறகு நடந்த 13 சட்டசபை பொதுத் தேர்தல்களில் 12 முறை இடம் பெற்றிருந்த நெல்லிக்குப்பம் தொகுதி தற்போது மறுசீரமைப்பில் காணாமல் போயுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பின் 1951ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தது. அப்போது கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி மற்றும் சிதம்பரம் ஆகிய ஐந்து தொகுதிகள் மட்டுமே இருந்தன. பின்னர் 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பமாக பெயர் மாறியது. அதன்பின் 1967ம் ஆண்டு தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியின் ஒருபகுதியை பிரித்து மீண்டும் பண்ருட்டி தொகுதி உருவானது.
தற்போதைய மறுசீரமைப்பில் காணாமல் போன நெல்லிக்குப்பம் தொகுதியின் முதல் தேர்தலில் காங்., கட்சி வெற்றி பெற்றது. பின்னர் நடந்த 62ல் தி.மு.க., 67ல் மா.கம்யூ., 71ல் தி.மு.க., 77ல் மா.கம்யூ., 80ல் தி.மு.க., 84ல் அ.தி.மு.க., 89ல் மா.கம்யூ., 91ல் அ.தி.மு.க., 96ல் தி.மு.க., 2001ல் அ.தி.மு.க., 2006ல் தி.மு.க., வெற்றி பெற்றன. மேலும் 1996ல் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ., மணி இறந்ததால் 2000ம் ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சண்முகம் வெற்றி பெற்றார். தொகுதி மறுசீரமைப்பில் இத்தொகுதியை நீக்கி, பண்ருட்டி தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக