பண்ருட்டி:
பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் படிவங்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான படிவம் 6, நீக்கல் படிவம் 7, திருத்தம் படிவம் 8, பாகம் மாற்றுதல் 8ஏ, வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்துடன் பெறுவதற்கு படிவம் 001சி ஆகியவை கிடைக்காமல் கடந்த 7 நாட்களாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வாக்காளர்கள் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு துவக்குவது உள்ளிட்ட அனைத்து சான்று பெறுவதற்கும் முகவரி ஆவணமாக பயன்படுவதால் அவசியம் தேவை என்பதால் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டியது அவசியமாகிறது. தொலைந்து போனவர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய வேண்டும் என சென்றால் படிவம் இல்லை வெளியில் விண்ணப்பம் விற்பவர்களிடம் வாங்கி வந்து கொடுங்கள் என வருவாய்த் துறையினர் அலட்சியமாக கூறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் விண்ணப்பங்களை வெளியே 2 ரூபாய்க்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கவனிக்க:
படிவங்களை தேர்தல் ஆணையத்தில் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாமே, வீண் அலைச்சல் எதற்கு!!!!!!!!!!!!!!
கீழ்காணும் இணைப்புகளிலிருந்து படிவங்களினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Forms | Forms Details |
Form 6 | Application for inclusion of name in electoral roll after draft publication of roll (if your name is not included in the draft roll). |
Form 7 | Application for objection to inclusion of name in electoral roll. |
Form 8 | Application for correction of particulars in electoral roll. |
Form 8A | Application for transposition of entry in electoral roll. |
Form 001C | Application for obtaining duplicate / Replacement EPIC |
Form 6A | Application for inclusion of name in electoral roll by an Overseas elector |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக